வாரந்தோறும் முருங்கைக்கீரை சூப் வழங்கும் திட்டம்
NEWS Sep 23,2025 11:44 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க, வாரந்தோறும் முருங்கைக்கீரை சூப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள், கல்வி அலுவலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.