டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்?
NEWS Sep 23,2025 12:00 pm
திருவாரூர் அன்னவாநல்லூர், பெரியகுடி பகுதிகளில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி, மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகளை தோண்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், “மாநில அரசு அனுமதி இன்றி எவ்வாறு இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றன?” என்ற கேள்வி டெல்டா மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. டெல்டா மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்ட நடவடிக்கைகள் மத்திய அரசு முன்னெடுத்து வருவது உறுதியாகியிருப்பதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி மன்னார்குடி சேதுராமன் தெரிவித்துள்ளார்.