திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள்
NEWS Sep 22,2025 09:22 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பத்து பயனாளிகளுக்கு நல வாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.