திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் வரை தடம் எண் 20 நகர பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்தை கண்டியூர் வரை நீட்டித்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தொடர்ந்து நேற்று முதல் கண்டியூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வகையில் நீட்டிப்பு ஆரம்பம். வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.