தொழுவூரில் சமூக நீதி நாள் விழா உறுதிமொழி
NEWS Sep 18,2025 03:57 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக நீதி நாள் விழா நடைபெற்றது. விழாவில் சமூக நீதி உறுதிமொழியானது அனைத்து வகுப்புகளிலும் எடுக்கப்பட்டது. பணியாளர்களுக்கான சமூக நீதி உறுதிமொழியானது முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில், முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், துறைத் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், பணியாளர்கள் உறுதிமொழியினை எடுத்தனர்.