கூத்தாநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு
NEWS Aug 03,2025 12:59 pm
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் லெட்சுமாங்குடி-திருவாரூர் சாலையிலுள்ள H.M.மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது திருவாரூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள் உரிமைகள், விவசாயிகள் நலன், பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரளானவர்கள் கலந்து கொண்டனர்.