கிக் பாக்ஸிங் போட்டியில் 80 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற சென்னை மாணவனுக்கு வரவேற்பு
NEWS Apr 04,2025 04:37 pm
தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கிக் பாக்ஸிங் போட்டியில் 80 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த ருத்ரேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ருத்ரேஷ்வரன் மூண்றரை வருடங்களாக தொடர்ந்து இந்த கலையை கற்றுக் கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்தார்.