தமிழ்நாடு முதல்வராக விஜய்க்கு ஆளுநர் ஆர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் ஸ்டேடியம் முழுவதும் உற்சாகக் குரல்கள் ஒலித்தன. முதல்வராக பொறுப்பேற்ற விஜய், இலவச மின்சாரம் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கோப்பில் இரண்டாவது கையெழுத்திட்டார். 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு பிரிவு, போதைப்பொருளுக்கு எதிரான தனி அமைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு விஜய் ஒப்புதல் வழங்கினார்.