திருவாரூரில் கோடை வெயில் தணித்த மழை
NEWS May 10,2026 11:38 am
திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மேகமூட்டத்துடன் கூடிய இடி மின்னல் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக பெய்த இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாங்குடி, கமலாபுரம், நன்னிலம், புலிவலம் பகுதிகளிலும் இந்த மழை எதிரொலித்தது.