திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதர், மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரம் சுற்றி வந்தனர். சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.