பொதக்குடி முஹம்மது அலி தெரு சாலை புதுப்பிப்பு
NEWS Feb 09,2026 04:06 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி முஹம்மது அலி தெருவில் நீண்ட காலமாக சிதிலமடைந்து இருந்த சாலை, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்ததையடுத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுத்திய இந்தச் சாலை, புதிய தார்ச் சாலையாக அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சீரான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது.