திருவாரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விளக்கி ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது, ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். தொழிற்சங்க தலைவர்கள் குணசேகரன், தர்மதாஸ், அழகிரிசாமி மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.