கொருக்கையில் ரூ.2.15 கோடி மதிப்பில் தொழிற்பேட்டை
NEWS Sep 17,2025 04:54 am
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொருக்கையில் ரூ.2.15 கோடி மதிப்பில் முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக புதிய சிட்கோ தொழிற்பேட்டையை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சிதலைவர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், ஆதி திராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொழிற்பேட்டையை பார்வையிட்டார்கள்.