கூத்தாநல்லூரில் அரசு மதுபானக்கடை அகற்ற கோரிக்கை
NEWS Sep 16,2025 08:08 pm
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரம் காடுவெட்டி கிராமத்தில் அரசு மதுபானக்கடை (எண்:9626) இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடை பொதுமக்கள் மட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கூத்தாநல்லூர் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.