மேலநத்தம் சிறுவன் பாம்புக்கடியில் உயிரிழப்பு
NEWS Sep 16,2025 08:09 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே மேலநத்தம் கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ்–விநோதினி தம்பதியின் 8 வயது மகன் கவின் பாம்பு கடியால் உயிரிழந்தார். வீட்டுமுன் விளையாடியபோது விஷப்பாம்பு கடித்ததால் உடல்நலம் குன்றிய கவினை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.