திருவாரூரில் கல்விக் கடன் முகாம்
NEWS Sep 13,2025 07:06 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக கல்விக் கடன் முகாம் 17.09.2025 காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும், நிதியின்றி தவிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தகுதிச் சான்றுகள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக கல்விக் கடன் வழங்கப்படும். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.