திருத்துறைப்பூண்டியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்
NEWS Sep 13,2025 07:03 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இரத்த சோகை, நீரிழிவு, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு, ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.