திருவாரூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
NEWS Sep 13,2025 07:02 pm
திருவாரூர் நகராட்சியின் சார்பில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களைப் பிடித்து, கால்நடை மருத்துவத்துறை குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாய்களின் ஆரோக்கியம் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.