அபிவிருத்தீஸ்வரத்தில் ஆலய கும்பாபிஷேகம் செப்டம்பர் 14-ம் தேதி
NEWS Sep 12,2025 10:35 pm
குடவாசல் தாலுக்கா, அபிவிருத்தீஸ்வரம் மேலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வரும் 14.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு திருவிழா காண அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.