கூடூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
NEWS Sep 12,2025 10:28 pm
திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முகாமை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினர். முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுகள் வழங்கின. மேலும், பலருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.