திருவாரூர் மாவட்டம் நெம்மேலியில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பத்தாயிரம் நெல் மூட்டைகளை கடந்த ஒரு வார காலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதாரத்தை விவசாயிகள் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் காலம் கடத்தாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய கோரிக்கை வைக்கிறார்கள்.