மன்னார்குடியில் சாலையோரத்தில் கலர் கோழி குஞ்சுகள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கலர் கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மூன்று ஜோடி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருக்கும் கோழி குஞ்சுகளை பார்த்து வாகனத்தை நிறுத்தி வாங்கி செல்கின்றனர். பெண்கள் ஆர்வத்துடன் வாங்குவதை காண முடிகிறது