பனை விதைகளை சேகரித்த பள்ளி மாணவர்கள்
NEWS Sep 09,2025 10:00 am
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பனை விதைகளை சேகரித்தல் நடந்தது. அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் பெற்றோரின் உதவியுடன் பனை விதைகளை சேகரித்து ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். இந்த அமைப்பு மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குழுக்களாக பிரித்து பனை விதைகளை சேகரித்து வருகிறது.