மரக்கடை பாசன வாய்க்கால் தூர்வார கோரிக்கை
NEWS Sep 09,2025 09:58 am
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மரக்கடை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக வெண்ணாற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீரினால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், உளுந்து, பயறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். பம்புசெட் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டி உள்ளது. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர் வாரி சீரமைப்பு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.