திருவாரூரில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
NEWS Sep 08,2025 04:53 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாக இணைப்பு கட்டிடத்தில் (அறை எண் 328, 329, 330) இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன. தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.