டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது சூரியகுமாருக்கு
NEWS Sep 07,2025 09:33 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார், இவ்வாண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். ஆசிரியரின் சாதனையை பள்ளித் தலைமையாசிரியர் வெற்றிவேலன், ஆசிரியர்கள் ரேணுகா, விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, சுதா, இளநிலை உதவியாளர் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டினர்.