மன்னார்குடியில் இலக்கிய வட்டம்
NEWS Sep 06,2025 09:52 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, தேசிய மேல்நிலைப் பள்ளி சாரதி கலையரங்கத்தில் எழுத்தாளர் வைகைசெல்வன் எழுதிய “ஒரு நூற்றாண்டின் தவம்” என்ற நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு காமராஜ் எம்எல்ஏ தலைமையேற்பதோடு, சுவாமிநாதன் பிஏபிஎல் முன்னிலையில் நடைபெறும். துணை செயலாளர் முகமது ஃபைசல் வரவேற்புரையாற்ற, வைகைசெல்வன் சிறப்புரையாற்ற உள்ளார். விநாயகன் நன்றியுரையாற்றுவார்.