சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரையரங்கு வெளிவந்தது
NEWS Sep 06,2025 12:30 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி LA CINEMA SHANTHI யில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூ மேனன், சபீர் கல்லாகரல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுதீப் எலமன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். முதல் நாளில் திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். வெளியேறும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர்.