திருவாரூர் ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகக்குழு கூட்டம்
NEWS Sep 06,2025 12:29 pm
திருவாரூர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் நிர்வாகக்குழு கூட்டம் ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களை செயலாளர் வராதராஜன் வரவேற்றார். பொருளாளர் பாலு, துணைத் தலைவர் நடராஜன், இணைச் செயலாளர் அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நன்னிலம் உத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.