ஜிஎஸ்டி குறைப்புக்கு விவசாயிகள் வரவேற்பு
NEWS Sep 05,2025 10:07 pm
திருவாரூர் அருகே விளமலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் நல சங்க மாநில செயலாளர் ராமமூர்த்தி, விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை வரவேற்றார். மேலும், விவசாயிகளை முழுமையாக பாதுகாக்க ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுத்துறை வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடன் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.