திருவாரூரில் சம்பா பட்டத்தில் நீண்ட கால நெல் ரகங்களுக்கு விவசாயிகள் விருப்பம்
NEWS Sep 04,2025 12:13 pm
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பட்டம் பருவத்தில் விவசாயிகள் நீண்ட கால நெல் ரகங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் கீழ் ADT–51, CR-1009 மற்றும் CR-SUB-1009 போன்ற நெல் ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. இந்த நெல் ரகங்களை தேர்வு செய்யும் போது யூரியாவின் பயன்பாட்டை குறைத்து வழங்குவது அவசியம் என்றும், அறுவடையை மாசி மாதத்திற்குள் திட்டமிட்டு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்றும் மாவட்ட வேளாண்மைத் துறை நிர்வாகி சந்தானம் அறிவுறுத்தினார்.