பாஜக அண்ணாமலை இளைஞர்களிடம் வேண்டுகோள்
NEWS Sep 02,2025 09:20 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இளைஞர்கள் முன்னின்று சபதமேற்று முத்துப்பேட்டையில் சுற்று பகுதியில் உள்ள ஏரி குளங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஊருக்கு நூறு இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வரக்கூடிய பாதையை சரி செய்திட வேண்டும். குளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குள்ளது.