திருவாரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
NEWS Aug 31,2025 07:36 pm
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், சமூகத்தில் நிலவும் தீண்டாமை, சாதிய அநீதிகளை கண்டித்து, அவற்றை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பலர் இதில் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.