மகனுக்கு ஆதார் பெற முடியாமல் தவித்த தம்பதி
NEWS Aug 31,2025 07:39 pm
திருவாரூர் மாவட்டம் களத்துமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் – வளர்மதி தம்பதியினர் தங்களின் மகனுக்கு ஆதார் அட்டை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பத்தை தள்ளிப்போடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த பல நலன்கள் கிடைக்காமல் குடும்பம் அவதி அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆதார் அட்டை விரைவில் வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.