சுகாதாரத்துறை சார்பில் கண் பரிசோதனை முகாம்
NEWS Aug 28,2025 01:30 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் பார்வை திறன் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல், வட்டார கண் பரிசோதகர் ஜெயக்குமார், கண்ணொளி திட்ட ஆசிரியை ரமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.