திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கு நிரப்பப்படும் பெட்ரோல் சரியான அளவில் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறைவான அளவு பெட்ரோல் வழங்கப்படுவதால் அதிகம் செலவிட்டும் நஷ்டம் ஏற்படுகிறது என்றும் கூறினர். அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.