பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்த மாணவர்கள்
NEWS Aug 25,2025 02:49 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு உபயோகமான விதைகள் வழங்கப்பட்டது. அவற்றை பள்ளியில் மாணவர்கள் குழி தோண்டி அமைத்து தனித்தனியாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளி பசுமைப்படை ஆசிரியை நிர்மலா தேவி மாணவர்களை சிறு சிறு குழுவாக பிரித்து தனித்தனி பாத்தியில் விதைகள் காசினாக்கீரை, அரைக்கீரை மற்றும் முள்ளங்கி ஆகியவை விதைக்கப்பட்டது.