ஸ்ரீவேம்படி மாரியம்மன் ஆலயத்தில் பூஜை
NEWS Aug 25,2025 11:44 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீவேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டு, ஏராளமான சுமங்கலி தாய்மார்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.