சுதாகர்ரெட்டி திருவுருவ படத்திற்கு மரியாதை!
NEWS Aug 25,2025 11:44 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி. Ex MP அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நகர செயலாளர் பி. ராதா முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதாகர் ரெட்டி திருவுருவ படத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் கலியமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.