பருத்தி குவிண்டால் ஏழாயிரத்து 545க்கு ஏலம்
NEWS Aug 25,2025 12:21 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்– நீடாமங்கலம் சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் மின்னணு சந்தை மூலம் செயலாளர் கண்ணன் மேற்பார்வையில் இடைத்தரகர்கள் இன்றி பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர். குவிண்டால் சராசரி 7 ஆயிரத்து 699க்கும், குறைந்தபட்சம் ரூபாய் 7 ஆயிரத்து 229க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 7 ஆயிரத்து 545க்கும் ஏலம் போனது.