பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மூலிகை நீர்மோர்
NEWS Aug 25,2025 12:24 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபாடைகட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மூலிகை நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சண்முகவேல், துணை தலைவர் மாரிமுத்து, துணை செயலாளர் கோவி ராமு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சோமு, கருமூர்த்தி, பாண்டியன், தட்சிணாமூர்த்தி, கண்ணன் கலந்து கொண்டனர்.