நலவாரிய அட்டை வழங்கிய ஆணையருக்கு பாராட்டு
NEWS Aug 25,2025 12:06 am
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் 60 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் துர்கா தெரிவித்தார். இதையடுத்து, அவரின் செயல்பாட்டை பாராட்டும் வகையில் நலவாரிய தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கலெக்டரும் கலந்து கொண்டார்.