விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
NEWS Aug 25,2025 11:46 am
திருவாரூர்: முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு, தூய்மை உள்ளிட்ட அம்சங்களை விவாதித்தனர். விழா அமைதியாக நடைபெற மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.