TNTJ பொதக்குடி கிளையில் பெண்கள் சொற்பொழிவு
NEWS Aug 23,2025 06:41 pm
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த TNTJ திருவாரூர் கிளை – பொதக்குடி, பதுரியா தெருவில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளியில் நாளை (24.08.2025, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது. "சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும்" என்ற தலைப்பில் குல்சன் இஹ்ஸானா ஆஃப்ரின் ஃபலிலா சனோஃபர் அவர்கள் விரிவாகவும், விளக்கமாகவும் உரையாற்ற உள்ளார்கள். மேலும், ஆண்களுக்கும் தனியான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.