“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
NEWS Aug 23,2025 06:43 pm
முத்துப்பேட்டை அருகே கீழநம்மங்குறிச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள், மேலும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, மக்களின் பிரச்சனைகளை கவனித்து உடனடி தீர்வுகளை வழங்கினர். குடிநீர் வசதி, சாலை அமைப்பு, வீட்டு வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த முகாமில் பதிவு செய்யப்பட்டன.