ராஜீவ் காந்தியின் 81- வது பிறந்த நாள் விழா
NEWS Aug 22,2025 09:34 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ராஜமுருகன் வரவேற்று பேசினார்.