மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
NEWS Aug 11,2025 11:14 pm
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட் டியலில் இருந்து சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களை சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையிலும், மாநில குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.