திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா, வலங்கைமான் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் சுகந்திநிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு கலை பயிற்றுனர் ராஜமணிகண்டன் தற்காப்பு கலை குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார். பயிற்ச்சிகளும் கொடுக்கப்பட்டது.