குடவாசலில் பாமக சார்பில் ஆலோசனை கூட்டம்
NEWS Aug 07,2025 12:09 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருமண மண்டபத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 10- ந்தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணுபாஸ்கரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட பாமக தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.