மனைவியுடன் வாக்கு செலுத்திய அமமுக வேட்பாளர்
NEWS Apr 23,2026 02:15 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் அவர்கள் தனது பிறந்த கிராமமான எடஅன்னவாசல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது மனைவியுடன் சென்று இன்று காலை வாக்களித்தார். இவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.